Thursday, October 16, 2008

என்றும் வாழும்

 எவரையுமே ஏசிடலாம் சிந்தையின்றி
  இட்டம்போல் பேசிடலாம் பண்பு இன்றி
  அவனென்ன இவனென்ன அறிஞனில்லை
  அனைவருமே எனக்கிணையும் ஈடுமில்லை
  தவறெனிலும் நான் சொன்னால் தங்க மொழி
  தலைவரென்றால் நான் சொல்வோர் மட்டும் மட்டும்
  குவலயமே என் முன்னால் தூசு தூசு
  கூறி நிற்பார் உள்ளமெல்லாம் மாசு மாசு


  எழுதியது நிற்க வேண்டும் என்றும் என்றும்
  எத்தனையோ தலைமுறையை வென்றும் வென்றும்
  பழுதில்லை என்று சொன்னால் வெல்லும் வெல்லும்
  படைப்பவரைப் படித்தவரை கொள்ளும் கொள்ளும்
  விழுது விடும் மென்மேலும் வீறு கொள்ளும்
  விழுந்து விடாப் பெரும்புகழை அள்ளும் அள்ளும்
  தொழுது நிற்கும் அவர் எழுத்தை வணக்கம் செய்யும்
  தொல்காப்பியன் போல என்றும் வாழும்

1 மறுமொழிகள்:

said...

தற்பெருமை பேசியே தமையழி்த்துக் கொண்டோர் பலர் பலர்
அவையடக்கமின்றி அழிவுற்றோர் பலர் பலர்
நாவடக்கமின்றி நசிவுண்டோர் பலர் பலர்
புலனடக்கமின்றி தம் புலமைகளை இழந்தோர் பலர் பலர்
தன்னடக்கமின்றி தனித்திற்றோர் பலர் பலர்
ஐம்புலன்களையும் அடக்கி அகிலத்தை ஆண்டிற்றோர் சிற்சிலரே!