கோட்டையிலே ஒரு காலத்திலே எங்க
கொடி பறந்தது ராமாரி எங்க
கொடி பறந்தது ராமாரி இன்று
கூட்டணிக் கொள்ளையில் எங்களது கொடி
கோவிந்தா ஆனது ராமாரி ஆமா
கோவிந்தா ஆனது ராமாரி
வேட்டையாடியேவெள்ளையரை ஒட்டி
விடுதலை வாங்கினோம் ராமாரி நாங்க
விடுதலை வாங்கினோம் ராமாரி இன்று
வேட்டையாடுவோர் கால்களுக்குக் கீழே
விழுந்து கிடக்கிறோம் ராமாரி ஆமா
விழுந்து கிடக்கிறோம் ராமாரி
பாட்டையைப் போட்டு பாதைகள் நல்லதாய்ப்
பார்த்து பார்த்துச் செஞ்சார் ராமாரி முன்னோர்
பார்த்து பார்த்துச் செஞ்சார் ராமாரி இன்று
கோட்டையைக் காப்பாத்த செஞ்சிடும் கொள்ளையில்
கூட்டாகி ஆடுறோம் ராமாரி நாங்க
கூட்டாகி ஆடுறோம் ராமாரி
காந்தி காமராசர் என்று பலப் பல
கண்ணியமானவர் கொண்டிருந்தோம் ஆமா
கண்ணியமானவர் கொண்டிருந்தோம் இன்று
வாந்தி எடுத்திடும் வாழ்க்கைச் சரித்திரம்
வக்கணையாய்க் கொண்டு வாழுகின்றோம் ஆமா
வக்கணையாய்க் கொண்டு வாழுகின்றோம்
சேர்ந்த இடத்தாலே சீரழிவா இல்ல
சேரும் முன்னால் வந்த சீரழிவா ஆமா
சேரும் முன்னால் வந்த சீரழிவா
சேரும் முன்னாலேயே சீரழிவைத் தேடி
சேர்த்ததனால் வந்த சீரழிவே ஆமா
சேர்த்ததனால் வந்த சீரழிவே
Tuesday, January 12, 2010
தேசியப் புலம்பல்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment