அமைச்சர்களின் மகிழூந்து அவர்கள் மட்டும்
அங்கேயும் இங்கேயும் போவதற்காய்
நமைப் போன்றோர் தந்து விட்ட வரிப் பணத்தால்
நம் மரசு வாங்கியதென் றுணராதார்கள்
குமைகின்றார் வெட்டுப் பட்ட காவலரை
கூட்டி அதில் சென்றிருந்தால் பிழைப்பாரென்று
அமைத்துள்ள ஆம்புலன்ஸ் அதற்குத்தானே
அதற்குள்ளே அவர் இறந்தால் என்ன செய்ய
அமைச்சர்கள் நம் அமைச்சர்கள் தான் ஆகா ஆகா
அனுதாபப் பேரறிவு அமைச்சர் கண்டீர்
குமைக்கின்றார் ஒன்றுணர மறுக்கின்றார் காண்
குண்டிருந்தால் என்ன செய்ய அய்யோ பாவம்
நமைப் பிரித்து மதத்தாலே நவகாளியில்
நாளெல்லாம் இரத்த ஆறு ஒடும் நேரம்
நினைத்தாரா காந்தி அண்ணல் இதனை எல்லாம்
நேராகக் குண்டுகளுக்கிடை நடந்தார்
Wednesday, January 13, 2010
நடந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
பத்திரிகையில் பார்த்தவர்கள் எல்லோரும் பதைத்து என்ன புண்ணியம் ,பக்கத்தில் இருந்தவர்கள் பாராமுகமாய் இருந்தனரே...
ஐயா!
கணப் பொழுதில் எவனோ ஒருவன் படமாக்கி விட்டதால் இன்று பலரும் பரிதவித்து எழுத்திலோ பேச்சிலோ சமர்ப்பணம் ஆக்கி விட்டு அவரவர் வேலையைத் தொடர்ந்து விட்டார்கள். கொன்றவன் ஒரு வேளை பார்த்திருந்தால் தன் கொலைத் தொழிலை விட்டிருப்பான்.
Post a Comment