இருக்கின்ற நல்லவரும் இந்த நாட்டில்
ஏனோ தானோ வென்று இருப்பதாலே
பொறுக்கிகளும் தீயவரும் இந்த நாட்டில்
பொறுப்பினிலே தலைவர் என்று இருக்கின்றாரே
செருக்கடைந்து அவர் செய்யும் செயல்கள் கண்டால்
சிறுமை மிகச் சிறுமை மிகக் கொடுமையன்றோ
கிறுக்கர்களாய் சில மக்கள் வாழ்ந்து இந்தக்
கேவலங்கள் தன்னை யெல்லாம் வணங்குகின்றார்
பொறுக்குதில்லை என்று சொன்ன பாரதியின்
பொன் வரிகள் இன்றைக்கும் பொருத்தமன்றோ
குறுக்கு வழித் தலைவர்களின் கொட்டம் கண்டும்
கோபமின்றி மானமின்றி வாழுகின்றோம்
அறுத்து நின்றார் நல்லதெல்லாம் என்ற போதும்
அவர் குறித்துப் பேசுவதே யில்லை அய்யோ
நெருக்கி உன்னை வேண்டுகின்றேன் சிவனே நாதா
நெற்றிக் கண் திறந்து ஒரு குமரன் தாராய்
Friday, January 1, 2010
குமரன் தாராய்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment