Tuesday, May 5, 2009

என்னுடனே

மக்கள் கவிஞருக்காய் மாபெரிய விழா எடுத்தார்
மனம் விரும்பி எனை அழைத்தார் சிங்கப்பூர் வாழ் தமிழர்
தக்கவனைப் பேசுதற்காய் தமிழோடு சென்றேன் நான்
தழுவி எனை மகிழ வைத்தார் மன்றத்தின் அன்பரெலாம்
பக்கம் இருந் தென்னைப் பாராட்டிச் சீராட்டி
பண்பு நலம் காத்தார்கள் அனைவருமே என்ன சொல்வேன்
தக்க இராமசாமியுடன் தனி அன்புப் புகழேந்தி
தாவி வரும் சிரிப்பழகு முத்துவுடன் காசி யவர்


எக்கணமும் எனக்காக ஒடிவரும் சண்முகமும்
இனிமை நிறை வெங்கடேஷ் எனும் அன்புத் தம்பியுடன்
தக்கவராய் அன்பு செய்யும் கபிலருடன் ராஜாராம்
தமிழ் மறையார் ஒட்டுநரின் தடாலடி அன்பு அதும்
மிக்கவராய் தமிழ் வளர்க்கும் உறரி கிருஷ்ணப் பெரியோரும்
மேன்மை மிகு தைப்பூச அன்பழகன் கடிகாரம்
இக்கணமும் எக்கணமும் என்றென்றும் மறவேன் நான்
இதயத்தில் இருக்கின்றார் அனைவருமே என்னுடனே

3 மறுமொழிகள்:

said...

ஓடை நடைஉரையும் ஒப்பில் குறுநகையும்
மேடை வியக்கும் மிடுக்குடனே -கோடை
இடிபோலும் சொற்பொழிவை ஈண்டளித்துச் சென்றீர்
துடிப்போடு நீள்கநிம் தொண்டு.

உள்ளத் திருக்கின்றார் உம்மோ(டு) எனும்அருமைத்
தெள்ளு தமிழ்ப்பாட்டைத் தேர்ந்தளித்தீர் -உள்ளபடி
தொட்டீரே பல்லோரை; தோகாய் எனைமட்டும்
விட்டீரே என்ன வியப்பு!

said...

உங்கள் கவிதை அருமை என்றால்,
அமுதாவின் கருத்தும் கூட.

said...

உங்கள் கவிதை அருமை என்றால்,
அமுதாவின் கருத்தும் கூட...