Sunday, February 7, 2010

பாவாணர்

தேவநேயப் பாவாணர் தமிழுக்காகத் தெய்வம் தந்த நன்கொடை காண் வாழ் நாள் தன்னை
பூவுலகின் முதல் மொழியாம் தமிழுக்காகப் போற்றி அதைச் செம்மையுறச் செய்த தீரர்
ஆவதெல்லாம் தமிழாலே என்று நமக்கறிவித்த பேரறிஞர் அவரைப் போன்றோர்
மேவிய நற்றொண்டாலே தமிழாம் தாயாள் மேன்மையுற்றாள் மேன்மையுற்றாள் வென்றும் நின்றாள்

2 மறுமொழிகள்:

said...

பாவாணர் பிறந்த நாளில் அந்த ஊழிப் பேரறிஞரை நினைவுக்கூர்ந்து எழுதியமை நன்றிக்கு உரியது ஐயா!

said...

அண்ணாச்சி அவர்களுக்கு
பாவாணரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
http://muelangovan.blogspot.com/