விம்முகின்றேன் விம்முகின்றேன்
வால் தூக்கி அமர்ந் தழகாய் பழம் கடிக்கும்
வடிவான அணிற் பெண்ணாள் என்றன் வீட்டில்
வாழ்வதற்காய் கூடு ஒன்று கட்டி வாழ்ந்தாள்
வந்து எங்கள் வீட்டுச் சோறும் உண்டு வாழ்ந்தாள்
சூழ் கலியால் மின்சார இணைப்பினூடே
சொந்த மகள் கூடு கட்டல் கண்டேனில்லை
வீழ்த்தி விட்டான் காலன் நான்கு குழந்தையோடு
விம்முகின்றேன் விம்முகின்றேன் மகளுக்காக
Tuesday, February 16, 2010
விம்முகின்றேன் விம்முகின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
மணிமணியாய்த் தமிழ்வளர்த்து மாட்சி கொண்டமகன்வளர்த்து மகள்களையும் தத்தெடுத்து..
அணிவளர்க்கும் புலமையினால் மன்றம் தோறும் அஞ்சாமை எனுமரிய குணம் வளர்த்து
பணிவளர்க்கும் எழுத்தாலே இணையந்தன்னில் புகழ்வளர்த்துபெயர்வளர்த்து பொலியும் அண்ணன்
அணில்வளர்த்து அதுவீழ,தனது நெஞ்சில்
அழல்வளர்த்து அழுத கவி அருமை அய்யா!!!
சிறுமை நீக்கும் உனது தமிழை
இளைஞருக்கும் சேர்க்கும் இணையம்
அது சேர்க்கும் எமக்கு நல்ல தன்மை
அருமை அருமை உனது பெருமை;
Post a Comment