ஆட்சியாளர் தன்னிடத்தில் நிமிர்ந்து பாட
அறிவு நிறைத் தமிழ்க் கம்பன் இன்று இல்லை
பூச்சியைப் போல் எவருக்கும் அஞ்சிநிற்கும்
புல்லர்களே புலவரென உயிரோ டுள்ளார்
ஆச்சு இங்கு எல்லாமே ஆகிப் போச்சு
ஆங்கிலமே தாய் மொழி போல் ஆகிப் போச்சு
போச்சு எல்லாம் போச்சு என்றால் பொறுப்பிலுள்ளோர்
புகழ் தேடி புகழ் தேடி அலைகின்றாரே
Thursday, February 25, 2010
தேடி அலைகின்றார்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
சரியாகப் பகன்றீர்கள் ஐயா..!!
மெல்லத் தமிழினிச் சாகும்-வரும்
மேலை மொழிகள் உலகினை ஆளும்
என்றுரைத்து மனம்வெதும்பி- தமிழ்
அன்று வளர்த்திட முனைந்தோர் ..!!
அவரெலாம் மறைந்தே போனார்
சிவனொடு கலந்தே போனார்..!!
இன்று வந்தவர்கள் இவரே தமிழ்த்
தாத்தன் காத்த வனானார்..!!
என்ன செய்யவும் கூடும் இது
நிலைகெட்டுத் தடுமாறும் உலகம்..!!
Post a Comment