ஒத்தக்கடைஆனைமலை காத்திடுங்க
ஒத்தக்கடை ஆனைமலைக்கு ஆபத்து வரும்ன்னு
ஒரு வருஷம் முன்னாலே கவிதையில சொன்னேன்
சித்தம் கொண்ட எவரோ அந்த வேலையில இறங்க
சிலை செதுக்கப் போறதாக ஏமாத்தப் பாத்தார்
மொத்தமாகக் கிராமம் எல்லாம் முழிச்சிக்கிட்டதாலே
மூடிக் கொஞ்ச நாள் கழிச்சு முயற்சி செஞ்சு பாப்பார்
ஒத்தக்கடை மக்கா நீங்க ஒத்துமையா நின்னு
ஊர்ப் பெருமை ஆனைமலை காத்திருங்க சாமி
Sunday, February 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
அய்யா, வணக்கம்,
இந்தக் கவிதை அருமை. ஓராண்டுக்கு முன்னர் தாங்கள் எழுதிய கவிதையை மறு பதிப்புச் செய்யலாமே?
இன்னொரு நட்பு ரீதியான பரிந்துரை.
உங்கள் படைப்புகள் ரீடரில் வரும்போது தலைக்குபள் இன்றி “title unknown" என்று வருகிறது. நீங்கள் படைப்பிற்கு இடும் தலைப்பையே வைக்கலாமே? ஏதேனும் விளக்கம் வேண்டுமெனில் என்னிடம் சொல்லுங்கள், முடிந்தவரை உதவுகிறேன்
ஒத்தக்கடை ஆனை மலையே
ஒரு அற்புத சிற்பம்தானே!
பத்தமடை பாய்க்குள்ளே
படுக்க வைக்கப்பார்க்கலாமா?
சிக்ஸ் பேக்ஸ் உடம்போடு
சிம்மக்கல்லு பக்கம் போனா - உன்
மார்பை செதுக்கி மார்பிள்ன்னு வித்துப்புடுவாங்கே
மதுரைக்கார மக்கா! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!
Post a Comment