உன்
கண்கள்
மீன்கள்
மட்டுமா?
கொக்குகளும்தான்.
*
தேனெடுத்த
பின்
மலர்கள்
வாடி
விடுமாம்.
உன்னைப்
பார்க்காமல்
உளறியிருக்கின்றார்கள்.
*
நகம்வெட்டி
அழுது
கொண்டிருந்தது.
உனக்கு
நாள்தோறும்
நகங்கள்
வளரவில்லையே
என்று.
*
தானியங்கி
பணம்
வழங்கும்
இயந்திரத்தின்
முன்
போகாதே
அட்டையே
இல்லாமல்
அத்தனை
பணத்தையும்
கொட்டிவிடப்
போகின்றது.
*
உன்னை
இறக்கி
விட்ட
இரயில்
பெருமூச்சோடுதான்
கிளம்பியது.
*
Tuesday, April 8, 2008
காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் - 2
Subscribe to:
Post Comments (Atom)
8 மறுமொழிகள்:
வாங்க...வாங்க..உங்கள் வரவு நல்வராகுக..
அட்டையே இல்லாமல் கொட்டுகின்ற இயந்திரம் - ஆகா எத்தனை அழகு அவள் !! கவிதை அடிகளும் தான் !
நன்றி நெல்லை சிவா மற்றும் செல்வி ஷங்கர் அவர்களே!
கவிதைகளில் காதல் ரொம்ப அழகு. ரசித்தேன்
அன்புள்ள நண்பருக்கு.வணக்கங்களும்
வாழ்த்துக்களும்.வாழ்க தமிழுடன்.
பாராட்டிற்கு நன்றி.
தங்கள்
நெல்லைக்கண்ணன்
15-04-2008
இந்த ப்ளாக் வரும்முன் உம்மிடமிருந்து காதல் கவிதைகளை எதிர்பார்க்கவில்லை..ஏனோ தெரியவில்லை..
ஆனால் மிகவும் அருமையாக உள்ளது கவிஞரே..
ஐயா, கவிதையின் கடைசி வரிகள். ரயில் பெருமூச்சு விட்டதாய் எழுதியுள்ளீர்கள். அது நீராவி காலத்து என்ஜின்கள் என்றால் இன்னும் மிகப்பெரிய பெருமூச்சுவிடும்.. இப்போதெல்லாம் பூனை போல் வந்து நிற்க்கின்றன...
அன்பின் தமிழ் ஆசான்...உங்கள் வரிகள் என்னால்... களவாடப்பட்டுள்ளதில்..
நம் இருவருக்குமே உயர்வு தானே..
கொடுத்ததால் உங்களுக்கும்
எடுத்ததால்....எனக்கும்..
இனி இப்பாலகன் உங்கள் வலையில்
தமிழ் பருக தவழ்ந்து வருவான்...
அன்புடன் இளங்கோவன், அமீரகம்
Post a Comment