பழம் பாடல் புதுக்கவிதை என்று ஒரு
படைப்புத்தி தந்திருந்தார் கண்ணதாசன்
உளம் கொண்ட அவ்வழகு வடிவம் தன்னில்
உலகத்துத் தமிழினத்தார் அனைவருக்கும்
தள வழியாய்ப் பழம் பாடல் அழகையெல்லாம்
தருவதற்கு நானும் இங்கு ஆசை கொண்டேன்
வழி வ்ழியாய் வந்த தமிழ்ப் புலமை யெல்லாம்
வருகிறது இவ்வழியில் வாழ்த்த வேண்டும்
கம்பனெனும் மாக்கவிஞன் காட்டுகின்ற காதலினை
அம்புவியின் தமிழன்பர் அனைவருக்கும் தர விழைந்தேன்
கொம்பு முலைக் கூட்டத்துக் கோலவிழிப் பெண்ணொருத்தி
வெம்புகின்ற தன்னுடலின் வெப்பமது தாங்காமல்
நம்பி நின்ற நாயகனை நாள் பலவாய்க் காணாமல்
வம்பு செய்யும் தன் உடலின் வாட்டமது தாங்காமல்
தெம்பு தர வருவானோ தீண்டி வெப்பம் தீர்ப்பானோ
தெங்கிள நீர் மார்பகத்தைச் சேர்ந்திடவே மாட்டானோ
நொந்து நின்றாள் பெண்ணவளும் நோவதனைத் தீர்ப்பதற்கு
வந்து விட்டான் நாயகனும் வரவேற்றாள் தாழிட்டாள்
செந்தமிழின் சிவப்புதட்டால் சேர்த்தே இறுக்குகின்றாள்
வந்தவனோ ம்ன்மகிழ்ந்தான் வரவிலுள்ள தாமதத்தால்
நொந்தவளும் தன்னை நோகடிப்பாள் என நினைந்தால்
அந்தி மழைக் காலத்து அரவணைப்பால் நெருக்குகின்றாள்
தந்து விட்டாள் தன்னை தாமதத்தால் ஏக்கத்தால்
என்றே கருதி நின்றான் இடையுறூ வந்ததங்கு
பல காலம் காத்திருந்த ஏக்கம் தன்னில்
பனி மொழியாள் தழுவி விட்டாள் தெளிந்த பின்னர்
சில பலவாம் கேள்விக்ளால் என்னை அவள்
சிக்கலுக்கு ஆளாக்கக் கூடும் என்றே
வெல வெலத்து நிற்கின்றான் அவளோ மெல்ல
விலகுகின்றாள் அவன் முதுகைத் திருப்பிப் பார்த்தாள்
பல பலவாய் எண்ணங்கள் படையெடுக்க
பாவி மகன் துடிக்கின்றான் அவளைப் பார்த்தான்
கல கல்வென்றே சிரித்தாள் கண்ணசைத்தாள
கலங்கியவன் புரியாமல் சிரித்து வைத்தான்
வல இடமாய் அவன் தன்னை ஆட்டி ஆட்டி தன்
வடிவழகால் கொல்லுகின்றாள சொல்லுகின்றாள
முலை இரண்டும் உந்தன் திரு மார்பை குத்தி
முதுகுக்கு வந்திருக்கும என நினைத்தேன்
சிலை மார்பே உன் மார்பு என்றுணர்ந்தேன்
சிரிப்பென்ன வா என்றே தழுவிக் கொண்டாள்
கம்பனது கற்பனையைக் காட்டும் பாடல்
காட்டுகின்றேன் படியுங்கள் மேலும் மேலும்
தெம்பளிக்கும் தமிழ்ப்பாடல் பலவும் தந்து
தினம் உம்மை வணங்கி நிற்பேன் எனை வாழ்த்த்ங்கள்
கொலை உரு அமைந்தெனக் கொடிய தோற்றத்தாள
கலை உரு அல்குலாள் கணவர்ப் புல்குவாள்
சிலை உரு வழி தரச் செறிந்த மார்பிற் தன்
முலை உருவின் என முதுகை நோக்கினாள்
தங்கள் அன்பின் அடிமை நெல்லைக்கண்ணன்
Monday, April 28, 2008
பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment