தந்தை - ந.சு. சுப்பையாபிள்ளை
தாய் - முத்துஇலக்குமி அம்மாள்
ஜனவரி 27 ,1945ல் பிறந்தேன்.
எட்டுப்பேர் உடன் பிறந்தோர்.
ஒரு வருடம் தந்தையின் அன்பிற்காக கல்லூரி சென்றேன்.
அடிப்படை தொழில் வேளாண்மையாகக்கொண்ட குடும்பம்.
என் துணைவி வேலம்மாளை 1969, செப்டம்பர் 7ல் கரம்பிடித்தேன்.
1997 பிப்ரவரி 23ல் அவர்கள் புற்றுநோயால் மறைந்தார்கள்.
இரு மகன்கள் -முதல் மகன் , திரைத்துறையில் இணை இயக்குநராகவும், இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளனர்.
முதல் மருமகள் வங்கிப்பணியாளராகவும், இரண்டாமவர் ஆசிரியராகவும் உள்ளனர்.
இரண்டு பேரன்கள். ஒரு பேத்தி.
இரண்டாம் மனைவி தெய்வநாயகி
தமிழறிவு, தந்தை தந்தது. தந்தையாரின் மிகப்பெரிய நூலகம், தந்தையார்
பள்ளியே செல்லாதவர், தமிழறிஞர்கள் பலர் அவர்களிடம் பாடம் கேட்டவர்கள்.
Tuesday, April 8, 2008
நான்...நெல்லை கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
17 மறுமொழிகள்:
வாழ்த்துக்கள் அய்யா!
பத்திரிக்கைகள் வாயிலாகவும்,
பட்டிமன்றங்களின் வாயிலாகவும் மட்டுமே நான் சந்தித்திருந்த உங்களை பதிவுலகில் கண்டு மகிழ்கிறேன்...!
வாங்க..வாங்க..
கூடவே, சாலமன் பாப்பையா போன்றோரும் வந்தால், எங்களுக்கு பேச நிறைய விசயம் கிடைக்கும். :P
இதை நீக்கினால்,ரெம்ப நல்லா இருக்கும்
//Word Verification
Type the characters you see in the picture above. //
வாருங்கள் ஐயா
உங்களை கொழும்புக் கம்பன் விழாவில் சந்தித்திருக்கின்றேன். இப்போ விஜய் தொலைக்காட்சியின் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சினூடாகக் காண்கின்றேன். உங்களுடன் சிலவிடயங்கள் விவாதிக்கவேண்டும்.
வாருங்கள் அய்யா, தொலைக்காட்சிகளில் - குறிப்பாகப் பொதிகையில் உங்களது பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். அழகு தமிழில் ஆழமான கருத்துகளைச் சான்றுகள் காட்டி சொல்வதிலிருந்து நான் சிலவற்றைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். உங்களின் சுவையான பேச்சு இலக்கிய வளர்ச்சிக்குத் துணை செய்வது. வளரும் தலைமுறையினருக்கு தமிழ் வளத்தைக் காட்டுவது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.
நன்றி - மகிழ்ச்சி
ஆயில்யன், ட்டிபிஸிடி , வந்தியத்தேவன்,செல்விஷங்கர்...
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
மிக்க மகிழ்ச்சி!
வலைப் பூவில் விழுந்த புதிய தமிழ் மலர் "நெல்லைக் கண்ணனை "அன்புடன் வரவேற்கிறோம்
உங்கள் சொற்பொழிவுகளை எழுத்துவடிவில் அல்லது ஒலிவடிவில் உங்கள் பதிவில் இட இயலுமா ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாழ்க தமிழுடன்.வணக்கம்.தங்கள்
எண்ணத்தை ஈடேற்ற முயல்கின்றேன்.
நன்றி.
தங்கள்
நெல்லைகண்ணன்
Vanakkam. Thangaludan Uraiyada anaivarukkum ariya Vayppu thandulleergal.Nanriyum Vazhthukkalum.
Annan Sankaran.
வணக்கத்திற்குரிய அய்யா அவர்களே,
வலைப்பூ உலகிற்கு வருக!
வண்டமிழ் நா ஊற தருக!
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
தங்களின் இலக்கியப் புலமை,தமிழ் பேச்சாற்றல்,எழுதும் கலைவண்னம்,அரசியல் கட்சிகளின் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் ,ஆகியவற்றை
தரணி போற்றும் பரணி பாயும் நெல்லைச் சீமையிலிருந்து தாங்கள் தொடங்கியுள்ள(April 2008)"நான்...நெல்லை கண்ணன்" வலப்பூவில்
காணும்(வாசிக்கும்) பெரும் பேறு பெறப்போகிறது தமிழ் கூறும் நல்லுலகம்.தமிழன்னையின் தவப் புதல்வரை வணங்கி வரவேற்கிறேன்.
வருக வருக !!!
இணையத்திலும் உலவட்டும் உங்கள் படைப்புகள்
மதிப்புக்குரிய ஐயா,
பதிவுலகில் தங்களைச் சந்திப்பதில் மெத்தவும் மகிழ்ச்சி.
தங்களைப் போன்ற தமிழறிஞர்கள்,ஆர்வலர்கள் பதிவுலகம் வருவது ஆரோக்கியமானதும் நல்ல வாசிப்புக்கு ஆக்கம் தரும் செயலுமாகும்.
வருக,வருக,நற்றமிழ் தருக....
ஐயா,
உங்கள் பதிவுலக வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
அன்புடன்
நடராஜன்.
அட, நம்ம சுகாவோட அய்யா. வணக்கம் அய்யா. ஏப்ரல் முழுவதும் பயணத்தில் இருந்ததால், தங்கள் வலைப்பதிவைத் தவறவிட்டிருக்கிறேன். வருக. வருக. அன்புடன், பி.கே. சிவகுமார்
உங்கள் துணைவியாரை இழந்த வருத்தத்தை 'விஜய்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உங்களது நிகழ்ச்சியில் அறிந்து வருத்தப்பட்டேன். உங்களது வலைப்பூ மென்மேலும் சிறக்க விரும்புகிறேன்.
Post a Comment