Tuesday, April 29, 2008

பழம் பாடல் புதுக்கவிதை கம்பன்

   சொற்களுக்குள்  அடங்காதாம்  காமம்  என்னும்  
          சுவையதுவும் சொல்லுகின்றான் கம்ப  நாடன்
    விற்பிடித்த இராமனவன்  சென்றான்  அங்கே
          விழி கொண்ட பெண்ணொருதி  கண்டு விட்டாள்  
  பொற் பதத்தாள்   படுகின்ற  துயரம் தன்னைப்
          புகலுகின்றான்  கம்பனவ்ன்  மெல்லக் கேட்பீர்
   கற்பனையை  விரிக்கின்றான்   விரித்த  போதும்
          கனித்தமிழர்  பண்பாடும்  காத்து  நின்றான்
      



     எழுத்துக்குள்  அடங்காத  காமம்  தன்னை
          எடுத்தெழுதி வெற்றி  கண்ட  ஒவியம் போல்
     துளிர்த்தங்கு  நிற்கின்றாள்  பெண்ணொருத்தி
          துடிக்கின்றாள்  ராமனையே கண்ட பின்னர்
     கழுத்தோடு  உறவு கொண்ட அணி கலன்கள்
          கை கால்கள்  இடுப்பிலுள்ள  அணிகலன்கள
     பொருப்பாகும்  மார்பகத்தின்  அணிகலன்கள்
          பொன் நகைகள்  அத்தனையும் பறித் தெறிந்தாள்

     நெருப்பாகி  மேனியெல்லாம்  தகி தகிக்க
          நெஞ்சுக்குள்  பெருந்தீயே  கொதி கொதிக்க
     சுருக்கான இடைக்குள்ளோ  சூடு  ஏற
          சொருகுகின்ற விழிகளுக்குள்  இராமன்  ஆட
     மிடுக்கான  இராமன்  அவன்  தந்த  நோயால்
          மேனி படும்  பாட்டில்  அவள்  ஆடினாலும்
     பொறுப்பாக  தன்  உடலை  ம்றைப்பதற்காய்
          போட்டிருந்தாள் ஆடையொன்று  மேனிமேலே 

     தன்னை  இழந்தாள்  எனறே  ஒதுகின்றான்
          தங்க நகை துறந்ததையும்  ஒதுகின்றான்
     மென்நகையை  இழந்தாள்  என்றோ துகின்றான்
          மேனி தாங்க முடியாள்  என்றோ துகின்றான்
     அன்னவெல்லாம்   ஒதியவன்  ஒதுகின்றான்
           அழகு மயில்  தாங்கி  நின்ற   தொன்றே யென்று
     மென்நகையாள் ஆடை மட்டும்  தாங்கினாளாம்
           மேன்மையுறு  தமிழினம்  தான்  என்பதனால்

     கன்னலெனும்  தமிழ்க் கவிதைக்  கம்பனவன்
          காட்டி நின்ற்   இப்பெருமை உள்ளம் தன்னில்
    மின்னலென  வெட்டி நிற்கும் மெய் சிலிர்க்கும
          மேன்மை கொண்ட  தமிழினத்தைப் போற்றி நிற்கும்
     அன்னவனின்  கவிதையினைக்  க்ற்கக்க்ற்க
          ஆடி நிற்கும்  பாடி நிற்கும்  நம் மனது
     சொல் நல்ம்  கடந்ததென்ற  அந்தப்  பாடல்
          சொலலு்கின்றேன்  இதன்  பின்னர் அதனைப் பாரும்

     சொல்நல்ம்  கடந்த  காமச்சுவையை  ஒர்  உருவம்  ஆக்கி
     இன்நலம்  தெரிய  வல்லார்  எழுதியது  என்ன நின்றாள்
     பொன்னையும்  பொருவு  நீரால்,  புனைந்தன  எல்லாம் போக
     தன்னையும்  தாங்கலாதாள்  துகில் ஒன்று  தாங்கி நின்றாள்
         

         
          

0 மறுமொழிகள்: