காதலித்துப் பார்த்ததனால் பாடம் கற்றேன்
கணணியமாய் இருந்ததனால் பாடம் கற்றேன்
ஆதரித்துப் பார்த்ததனால் பாடம் கற்றேன்
அன்பு செய்து பார்த்ததனால் பாடம் கற்றேன
பேர் தரித்த புகழதனால் பாடம் கற்றேன்
பெரியவராய் நடிப்பவரால் பாடம் கற்றேன்
ஊர் நிறைந்த நண்பர்களால் பாடம் கற்றேன்
உணமை சொல்லும் காரணத்தால் பாடம் கற்றேன்
வார் குழலார் துன்பம் கண்டு பாடம் கற்றேன்
வாய் திறவா ஊமையர் பால் பாடம் கற்றேன்
கூர் மதியார் கொடுமைகளால் பாடம் கற்றேன்
கொடுத்ததனால் அளித்ததனால் பாடம் கற்றேன்
யாரிடமும் அன்பு செய்து பாடம் கற்றேன்
யாசித்தார் தம்மிடமும் பாடம் கற்றேன
ஊர் முழுக்கப் பாடம் கற்றும் என்ன செய்தேன்
உள்ளமதில் நிறுத்தாமல் மீண்டும் கற்றேன்
Saturday, April 19, 2008
பாடம் கற்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
நெல்லை கண்ணன் ஐயா வணக்கம் !!!
வலைப்பதிவு உலகில் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி :)
தங்களின் இலக்கிய ஞானம் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.
தொடர்ந்து பதிவெழுதி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள் என்ற சந்தோசத்துடன்,
யோகேஸ்வரன்
ponvandu.blogspot.com
அன்பான அய்யா வணக்கம்.
தங்களைப் போன்ற உண்மையான
வர்கள் அன்பிற்கு நான் செய்யும் கைம்
மாறே தொடர்ந்து எழுதுவதுதான்.
நன்றி அய்யா
தங்கள்
நெல்லைகண்ணன்
Post a Comment