Thursday, April 10, 2008

வாய்க்கரிசி

காட்டையும் மேட்டையும் கட்டிடமாக்குங்க!
ஆடோடு் மாடும் சுவரொட்டி திங்கட்டும்.

குளத்தோடு ஏரியை குடியிருப்பு ஆக்குங்க
கொககோடு் நாரையும் கூண்டொடு ஒழியட்டும்!

வயக்காட்டையெல்லாம் வாழ்விடமாக்குங்க!
வாய்க்கரிசிக்கென்ன அமெரிக்கா போடுவான்.

5 மறுமொழிகள்:

said...

//வயக்காட்டையெல்லாம் வாழ்விடமாக்குங்க!
வாய்க்கரிசி அமெரிக்கா போடுவான்.//

நெல்லைக் கண்ணன் அய்யா,
அருமையான கவிதை;ஆனா வாய்க்கரிசி எதுக்கு அமெரிக்கா காரன் போடணும்? நம்ம ஊர் மஞ்ச துண்டு அய்யா முதல் வாய்க்கரிசியா போட்டுடுமே.எல்லாத்திலேயும் நம்ம இனமானத் தலைவர் தானே முதல்வரா இருப்பாரு.

பாலா

said...

இயற்கையின் அழிவில் எத்தனை ஆதங்கம் ! அதைக் காக்க வேண்டுமே -- செயற்கை முறைகள் செழிப்பை எல்லாம் அழைத்துக் கொண்டிருக்கின்றன என்ற ஏக்கம் பெருமூச்சாய் கவிதை அடிகளில் வருகின்றது.

நன்றி

said...

வாங்க அய்யா....

தமிழ்மணத்துக்கு வாங்க!

உங்கள் படைப்புகளில் பிரமிக்கக் காத்திருக்கிறோம்.

Anonymous said...

அமெரிக்காகாரன் எதுக்கு வாய்க்கரிசி போடப் போறான், பாலா சொன்ன மாதிரி ஒருத்தர் இருக்காரே..... நம்ம தலையில நாமே மண்ணை வாரிப் போட்டுக்கறோம். 'நமக்கு நாமே வாய்க்கரிசி" திட்டம் வந்துருச்சி அய்யா..........

கடுகு.

said...

////காட்டையும் மேட்டையும் கட்டிடமாக்குங்க!
ஆடும் மாடும் சுவரொட்டி திங்கட்டும்.

குளத்தை ஏரியை குடியிருப்பு ஆக்குங்க
கொக்கும் நாரையும் கூண்டொடு ஒழியட்டும்!

வயக்காட்டையெல்லாம் வாழ்விடமாக்குங்க!
வாய்க்கரிசி அமெரிக்கா போடுவான்.////

எரியூட்டி அஸ்திதர இயந்திரம் வந்திருச்சி
இருக்குமிடமே கங்கை இங்கெயே கரைத்துவிடு!