Sunday, April 27, 2008

வாருங்கள்

     வாருங்கள்  நண்பர்களே   அன்பு   செய்து
          வாழ்க்கையினைச் சுகமாக்கி மகிழ்வு   கொள்வோம்
     சேருங்கள்  அனைவரையும்  அன்பினுக்குள்
           சிறு தவறு  அனைத்தையுமே பொறுத்து  வெல்வோம்
     பாருங்கள்  நல்லதையே   வெற்றி   சேரும்
          பாரனைத்தும்  உறவாகும்  பண்பு  கூடும்
     தேருங்கள்  சிறப்பனைத்தும்  தேர்ந்து ஒர்ந்தால்
          தெய்வங்கள்  நீங்கள் தான்  வேறொன் றில்லை


அன்புடயீர்     வண்க்கம்.  நேற்று  காரைக்குடி  அருகில்  பல்வான்குடி  சிவன்
கோயிலில்  உரை நிகழ்த்தச் சென்றிருந்தேன்.அன்பே  வடிவான்  அந்த மக்கள்
அவர்தம்  விருந்தோம்பல்.மனம்  நிறைந்தது.சிங்கப்பூரிலிருந்து இனிய  நண்பர்
சிதம்பரநாதன்  நண்பர்  பால்சசந்திரன்  பழனியப்பன்  நண்பர்  கோவைக்கண்ணன்
மூலமாக  சிறபபான  ஏற்பாடுகள் செய்திருந்தார்.அருமையான் கூட்டம்.பேசி
முடித்துப்  பார்க்கின்றேன்.இரண்டரை  மணி  நேரம்  பேசியிருக்கின்றேன்.
அண்ணன்  குமரி  அனந்தன்   ஒரு முறை  தூத்துக்குடி  மாநாட்டில்  சொன்னார்
கண்ணனை  ஆய்ச்சியர்  உரலில்  கட்டிப் போடுவார்கள்.நமது  கண்ணனோ
மக்களை  தனது  உரையால்  கட்டிப் போடுவார்   என்று.அதனை எனது உதவியாள்ர்  நினைவு  படுத்திப்  பெருமை சேர்த்தார்.நன்றி.

த்ங்கள்  அன்பின்   அடிமை       நெல்லைக்கண்ணன்

3 மறுமொழிகள்:

said...

//அண்ணன் குமரி அனந்தன் ஒரு முறை தூத்துக்குடி மாநாட்டில் சொன்னார்
கண்ணனை ஆய்ச்சியர் உரலில் கட்டிப் போடுவார்கள்.நமது கண்ணனோ
மக்களை தனது உரையால் கட்டிப் போடுவார் //

மாறாமல் ,உண்மையைத்தான் கூறியிருக்கிறார் அய்யா!

said...

வாருங்கள் அய்யா,

உங்களைப் பற்றி சுந்தரின் மூலமாக அறிந்து கொண்டேன்.

வாருங்கள் வந்து படைப்புகளை வழங்குங்க!

said...

ஐயா வணக்கம் ,
எனது நண்பர் காளிதாஸ் மூலமாக உங்களுடைய உரைகளை அதிகம் கேட்டிருக்கிறேன். மேலும் விஜய் டிவி மூலமாகவும் உங்களுடைய தமிழ், அதிகம் ஈர்த்திருக்கிறது. சென்ற வாரம் ஆனந்த விகடன் மூலமாக உங்களுடைய இந்த வலைப்பூவை பற்றியும் அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சி. எஸ்.ராமகிருஷ்ணன், ஞானி, ஜெயமோகன் தற்பொழுது தாங்கள் என உங்கள் அனைவரையும் இவ்வளவு அருகாமையில் சந்திக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களுடைய தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது என்னுடைய வலைபூவினை பாருங்கள், உங்களுடைய மேலான கருத்துக்கள என்போன்ற எழுத, படிக்க ஆரம்பிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் . நன்றி.