பெருகி வரும் காவேரியைத் தடுப்பதற்கு
பெரியவர்கள் யர்ருக்கும் வலிமையுண்டோ
அருகி வரும் மனிதப்பண் பற்றவரால்
ஆகி வரும் கேடன்றோ இவைக ளெல்லாம்
உருகி நின்று மொழி பேசும் மனிதர்களே
உயிர் வாழ்க்கை எத்தனை நாள் உணர்வீரோ நீர்
பருகி நிற்கும் நீர் இங்கே இயற்கை அன்னை
பரிந்தளித்த கொடையன்றோ அறியீரோ நீர்
மொழி தேர்ந்தும் மதம் தேர்ந்தும் நாடு தேர்ந்தும்
முறையாக வந்தா நீர் பிறந்தீர் இங்கு
பழி தேடிக கொள்கின்றீர் மனிதரென்றால்
ப்ண்போடு வாழ்தல் என்று மறந்தே போனீர்
கழி பேருவகை யொடு கன்னடத்தான்
கனித்தமிழான் என்றெல்லாம் ஆடுகின்றீர்
வழி உண்டு அன்போடு வாழுதற்கு
வாழுங்கள் இல்லையென்றால் ஒழிந்தே போவீர்
Saturday, April 12, 2008
இன்றைய கவிதை காவேரி
Subscribe to:
Post Comments (Atom)
10 மறுமொழிகள்:
ஆஹா...கவிதை அற்புதமாக இருக்கிறது. உங்கள் தமிழுக்கு இதெல்லாம் சாதாரணம்.! ஆனால் எங்களுக்கு இதுதான் அசாதாரணம்!
கலக்குங்கள் அய்யா!
நல்லா இருக்கு :))
நன்றி சுரேகா வாழ்க தமிழுடன்
கணிப்பொறியில் உட்கார்ந்து கொண்டு
எழுதிய கவிதை.நேற்றிலிருந்தல்ல
எப்போதும் கவிதைகளை அப்படித்
தான் எழுதிப் பழக்கம்.
என்றும் உங்கள் அன்பை நாடும்
நெல்லை கண்ணன்
வணக்கம் ஆயில்யன் வாழ்க தமிழுடன்.உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.தமிழுக்காக வாழும் எனக்கு தங்களைப் போன்றோரின் அன்பே
உயிர் மூச்சு.என்றும் நன்றியுடன்.
தங்கள் அன்பையே நாடும்
நெல்லை கண்ணன்
Maranthu pona manitha neyathaiyum manathin varuthathiyum mani maniyaha solli irukkeenteergal iyya?
madiyum manitha neyam mannil vaalum iyya verene ungalai pontravrgal iruppathal
anbudan
a.j.rajaseker
arivippalar
hello fm
nellai
வணக்கம் திரு. நெல்லை கண்ணன் அவர்களே !
வலைத்திரட்டில் உங்களைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வளமான சொற்களாலும், சிந்தனைகளாலும் உங்களது கவிதைகள் எங்களை ஆளுகின்றன. உங்களின் கவிதைகளைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி!
சென்னை கலைவானர் அரங்கில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு " நிகழ்ச்சிக்காக, நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு உங்கள் முன்னால், 3 நிமிடங்கள் பேசி, உங்களால் தேர்வு செய்யப்படாதவன் நான் என்பதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இங்ஙனம்
உழவன்
http://tamizhodu.blogspot.com
வணக்கம்.இராஜசேகர்வாழ்க
தமிழுடன்.
தங்களின் பாராட்டிற்கு ந்ன்றி.
தங்கள் அன்பை என்றும் நாடும்
நெல்லை கண்ணன்
அன்புள்ள உழவன் அவர்களுக்கு
வணக்கம்.வாழ்க தமிழுடன்.எனது
மனமார்ந்த நன்றி தொடர்ந்து
தளத்தைப் பாருங்கள்.
என்றும் தங்கள் அன்பை விரும்பும்
நெல்லை கண்ணன்
அறிவம் இவனை
கல்யாண்ஜி
குளம் பெருகி மறுகாலே போகும
இந்தக்
கோடை மழைக் காலத்தில் தமிழே
உந்தன்
வளம் பெருக்கி நிற்கின்றான் நெல்லை
கண்ணன்
வாழ்க தமிழ் உடன் என்னும் வேதம்
ஒதி
தளம் இணையம் வழி தினமும்,வாசல்
தோறும்
தமிழ்க் கோலம் இழைக்கின்றான் காணு
வீரேல்
உளம் நிறையும் மனவீதி தோறும்
நித்தம்
ஒடி வரும் ஞானத் தேர் அச்சம்
தீர்ந்து
களம் புகுமோர் வீரம் வரும்,நெஞ்சுக்
குள்ளே
கனல் பெருகும்,புவி மீதில் எவர்க்கும்
அஞ்சா
இளம் பருவம் மீண்டும் வரும்,வீறு
கொள்ளும்
இதயத்தில் புது ரத்தம் பாயும்,
உப்பின்
அளம் என்னில் கரிக்கத்தான் செய்யும்
இந்த
ஆழ்ந்த தமிழ்க் கடலலையோ
இனிப்பில் துள்ளும்
கிளம்புகவே இது காறும் கற்றோம்
இல்லை
கேட்பதனால் அறிவம் என இவனைக்
கேட்போம்
பெருமாள்புரம்
12/04/2008 கல்யாண்ஜி
Vanakkam.
Enathu Anbu Vazhthukkal.
Post a Comment