ஆகாயம் தனில் எங்கும் எல்லை கண்டார்
அலை கடலில் நதிகளிலே எல்லை கண்டார்
பூகோளம் என்றாலே எல்லைகளால்
பொலிவதுதான் என்றிங்கு படங்கள் தந்தார்
ஆகா இக்காற்றை மட்டும் எல்லை காட்டி
அடைத்து வைக்க மானிடரால் முடிய்வில்லை
சாகும் வரை மனித குலம் வாழ்வதற்காய்
சத்தியமாய்க் காத்தவரை அறியேன் அய்யா
Wednesday, April 23, 2008
அறியேன் அய்யா கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
ஆமாம் அய்யா..காற்றுக்கு மட்டும்தான் எல்லை வகுக்கவில்லை மனிதன். அதற்கும் ஏதாவது உபாயம் கண்டுவிட்டால்...அப்போதும் கர்நாடகத்திடம் நாம் காற்றுகேட்டு போராடும் நிலை வந்துவிடும்.
கவிதை அருமை அய்யா!
Post a Comment