ஒரு உண்ர்வே இரு புலவர் உள்ளம் தன்னில்
உருவாகும் என்பதற்கு உவமையாக
தருகின்றேன் இரு செய்யுள் உங்களுக்கு
தமிழன்னை கொடைகளினால் உளம் ம்கிழ்வீர்
இல்லாத இடை கொண்ட பெணணொருத்தி
இரு மார்பைத் தாங்கி மெல்ல நடக்கின்றாளாம
பொல்லாத மார்பதனின் சுமைகள் தன்னால்
பொறுக்காமல் இடையதுவும் ஒடியும் என்றே
நில்லாமல் ஒலி எழுப்ப என்றே அந்த
நெடுங் கண்ணாள் சிலம்பிரண்டும சத்தமிட்டு
எல்லோரும் வாருங்கள் இனிய பெண்ணின்
இடை முறியும் முன்னாலே காக்க என்று
குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக்
கூப்பிடுமாம் ஊரையெல்லாம் உறவையெல்லாம்
அய்யோ இதைப் போன்ற அழகுச் செய்தி
அளிப்பதுவோ இரு புலவர் நமக்கு அய்யா
மெய்யாக வெண்பாவிற் கொருவரென்று
மேன்மை கொண்ட புகழேநதிபபுல்வரோடு
பொய்யாத செயங்கொண்டான் பரணியிலே
புகலுகின்றான் இச் செய்தி காண்போம் வாரீர்
நளவெண்பா
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டாது இடையென்று வாய் விட்டு - நாள்த் தேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்க்ள் பூண்டு
கலிங்கத்துப் பரணி
உபய தனமிசையில் ஒடியும் இடை ந்டையை
ஒழியும் ஒழியும் என ஒண்சிலம்பு
அபயம் அபயம் என அலற நடை பயிலும
அரிவை மீர் கடைகள் திறமினோ்
Wednesday, April 30, 2008
பழம் பாடல் புதுக்கவிதை பரணி, நளவெண்பா
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment