Sunday, April 20, 2008

ஒத்தக்கடை ஆனை

புதுக்கோட்டைக்கு ஒரு விழாவிற்குச் சென்றபோது, ஒத்தக்கடை ஆனை மலையைப்பார்த்தேன். அதைச்சுற்றியுள்ள மலைகளெல்லாம் எந்தப்பணக்காரர்
வீட்டில் சலவைக்கல்லாக மாறியிருக்கிறதோ? ஒத்தக்கடைக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ என்று கவலையில் விளைந்த கவிதை!


ஒத்தக்கடை ஆனைமலை
எத்தனை நாள் இருக்கும்
ஊர்வழியே போகையிலே
பாத்துக்கிட்டே போனேன்
கெத்தான ஆள் யாரும்
கீழ் மேலாய்ப் பணத்தை
கிண்ணாரம் கொட்டியே
அள்ளித் தந்தால்
ஒத்தக்கடை கிரானைட்
ஒலகெங்கும் போகும்
ஊர்மட்டும் பொலிவிழந்து
பொசுக்குன்னு போகும்.

சத்தியமாய் இதையேதும்
சதிகாரர் கூட்டம்
சட்டுன்னு முடிச்சுட்டா
யாரு என்ன பண்ண
பத்திரமா பாத்துக்குங்க
ஒத்தக்கடை மக்கா
பாவிப்பய கூட்டம் அதை
ஒழிச்சிரவே கூடும்.

2 மறுமொழிகள்:

said...

பொன்வண்டு has left a new comment on your post "பாடம் கற்றேன்":

நெல்லை கண்ணன் ஐயா வணக்கம் !!!

வலைப்பதிவு உலகில் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி :)

தங்களின் இலக்கிய ஞானம் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.

தொடர்ந்து பதிவெழுதி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள் என்ற சந்தோசத்துடன்,
யோகேஸ்வரன்
ponvandu.blogspot.com

said...

மேலூர் வழியெல்லாம்
முடித்து ஒழித்தபின்னே
ஆனைமலை வருவார்கள்
அய்யா பொறுத்திருங்கள்!