கவிதை எழுத விழையும் நண்பர் கருத்தில் இதனைக் கொள்வீரே
புவியை வெல்லும் கவிதை யாத்து புகழால் நீரும் வெல்வீரே
கம்பன் தன்னை முற்றும் கற்று கருத்தில் ஏற்றிக் கொள்வீரேல
நம்பும் அழகுக் கவிதை வந்து நடமேயாடும் உம் மனதில்
மின்னும் இனிய தமிழில் சிவனின் மேன்மை கூறும் வாசகத்தை
பொன் போல் மனதில் ஏற்றிப்போற்ற பொலியும் கவிதை உம் வசமே
கண்ணே என்று இறைவன் தன்னை கருத்தாய்ப் போற்றும் தேவாரம்
பண்ணே தெளிந்து படித்தீரென்றால் பழகும் கவிதை உம்மிடமே
குறளை மீண்டும் மீண்டும் கற்றால் குதிக்கும் கவிதை உம்மிடமே
அறமே ஒங்கும் சிலம்பைக் கற்றால் ஆடும் கவிதை உம்மிடமே
புறமும் அகமும் கற்றால் போதும் புதிதாய்ப் பொலியும் உம் தமிழே
திறமும் தெளிவும் கொண்டே கவிதை தினமும் ஆகும் உம் வசமே
அறிவு என்றல் அன்பே என்ற அருமைக் குறளைக் கற்றீரேல்
உறவு என்றால் உயிர்கள் என்று உணர்ந்தே நீரும் வெல்வீரே
செறிவாய்க் கற்று நின்றீரென்றால் செந்தமிழென்றும் உம் வசமே
செப்பும் செய்தி அனைத்தும் கவிதைச் சீராய் அமையும் உம்மிடமே
பார்க்கும் வாழ்க்கைப் பாதையெல்லாம் பதிவாய் மனத்தில் கொள்வீரேல்
ஆர்க்கும் கவிதை உள்ளுந்தொறும் அணியாய் வந்து பேர் சொலுமே
வேர்த்தே உழைக்கும் மனிதர் கொள்ளும் வேதனை அதனைப் பார்த்தீரேல்
பேர்க்கும் மனதை உந்தம் கவிதை பிறக்கும் புரட்சி உம்மிடமே
தாய்மைப் பொறுப்பைக் கொண்டே வாழும் தங்க மகளிர் படும் பாட்டை
வாய்மை நிறைந்த வார்த்தைகளால் நீர் வடிக்கும் கவிதை வென்றிடுமே
தூய்மை வாழ்க்கை கொண்டே வாழும் துறவி போன்ற நல்லவரை
தொழுதே பாடும் கவிதை உம்மை தூக்கி உயரே வைத்திடுமே
Friday, April 25, 2008
கவிதை எழுத
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
கவிதை புனைவோருக்கு கனிவுடன் பாடம் நடத்துவது போல் அறிவுரை ஆயிரம் சொல்லிய சொல்லின் செல்வர்
கவிச் சக்கரவர்த்தி கண்ணண் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
-நெல்வேலி கார்த்திக்
கவிதை புனைவோருக்கு கனிவுடன் பாடம் நடத்துவது போல் அறிவுரை ஆயிரம் சொல்லிய சொல்லின் செல்வர்
கவிச் சக்கரவர்த்தி கண்ணண் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
-நெல்வேலி கார்த்திக்
மரணம் நோக்கி நடக்கின்ற
என்னைப் போன்றோர்
மாத்தமிழை இளையவருக்குச்
சொல்லிச் செல்லத்
தருணம் இது என்
றுணர்ந்த காரணத்தால்
தந்தேன் உம் அன்பிற்கு
நன்றி அய்யா
தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ண்ன்
Post a Comment