Wednesday, March 3, 2010

நித்தியமும் ஆனந்தம்

இல் வாழ்க்கை ஒன்றேதான் சிறந்த தென்று
எம் தந்தை வள்ளுவரும் உறுதி சொன்னார்
நல் வாழ்க்கை அதுவேதான் இயல்பு என்றார்
நலம் பயக்கும் அது ஒன்றே உலகுக்கு என்றார்
பொய் வாழ்க்கை வாழ்ந் ததனால் புகழைச் சேர்த்தார்
பொசுக்கென்று பெண்ணோடு மாட்டிக் கொண்டார்
உய்வளிக்க வந்த சாமி நித்யானந்தம்
உல்லாசம் காணுகின்றார் நடிகையோடு


கதவைத் திறக்கச் சொன்னார் நம்மிடத்தில்
காமத்தில் அவர் கதவும் திறந்து கொள்ள
விதம் விதமாய்க் காட்சிகளும் நமது கண்ணில்
விரிகிறது நித்தியமும் ஆனந்தம் தான்
பதை பதைக்க வேண்டாம் இவர் மாட்டிக் கொண்டார்
பல பேர்கள் மாட்டாமல் வாழுகின்றார்
சதை வாழ்க்கை இதிலிருந்து மீள்வதெல் லாம்
சாத்தியமா ஒருக் காலும் இல்லை அய்யா

3 மறுமொழிகள்:

said...

:-)) அவர்கள் உபதேசம் ஊருக்கு மட்டும் தானாம்...

said...

சாமியார்களுக்கு கட்டாய திருமணம் செய்ய சட்டம் வருமா சார்...

said...

//பல பேர்கள் மாட்டாமல் வாழுகின்றார்//
இவர்களை மாட்டவைப்பதே உங்கள் கடமை...இனிமேல் அதைச் செய்யுங்கள்.