கலைகளினைக் காப்பதிலும் கோயில்களின்
கண்ணியத்தைக் காப்பதிலும் தம் பெருமை
நிலைகளினைக் காப்பதிலும் கேரளத்தார்
நிமிர்ந்து நிற்றல் பார்க்கின்றேன் நடிகரெல்லாம்
விலை மதிப்பேயில்லாத வேட்டியில் தான்
வெளியினிலே வருகின்றார் எழுதுவோரோ
நிலை குலைவதில்லை எந்த நிலையிலுமே
நிமிர்ந்து நின்று விருதுகளை மறுக்கின்றார் காண்
உலகினிலே முதல் மொழியாம் தமிழ் மொழியின்
உயர்ந்த கலைச் செல்வங்கள் போற்றினோமா
பல விதத்துக் கலைகளுக்கு பண்பினுக்கு
பயிற்றும் களம் கோயில்களை காத்துளோமோ
சிலை வடித்தோம் தலைவருக்கு அதனைக் கூட
சீரழியத் தெருவினிலே நிறுத்தினோமே
கலைகளெல்லாம் குத்தாட்டம் திரைப் படமென்று
கண்ணியமேயில்லாமல் ஒழிந்தோம் நாமே
Thursday, March 11, 2010
ஒழிந்தோம் நாமே
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment