Saturday, June 28, 2008

நிறுத்துங்க என்று சொன்னார்

மதுரையிலே ஒரு கூட்டம அங்கே ஏழை
மக்களுக்காய் பிறந்து வந்த பெருந்தலைவர்
கதி அவரே என்றிருக்கும் மக்களின் முன்
கணக்காகச் சிலர் அவரைப் புகழுகிறார்
இடை மறித்துப் பெருந்தலைவர் காமராஜர்
எனைப் புகழ என்ன உண்டு என்று சொல்லி
பட படத்தார் குழந்தை குட்டி குடும்பம் என்று
பல இருந்தும் பதவியிலே தானிருந்தும்

திட மனதாய் வறுமையிலும் நேர்மையுடன்
தேசமதே சொத்தென்னும் ஒர்மையுடன்
வட புலத்தார் கண்டாலும் வணங்கி நிற்கும்
வாழ்வாங்கு வாழும் எங்கள் கக்கனையே
தினம் புகழ்ந்து போற்றுங்கள் அதுவே நன்று
தெரியுமில்ல நான் ஒண்டிக் கட்டை என்னை
விதம் விதமாய்ப் புகழ்வதிலே நியாயமில்லே
வேண்டாம் அதை நிறுத்துங்க என்று சொன்னார்

3 மறுமொழிகள்:

said...

பெருந்தலைவரைப் பற்றி தாங்கள் 'பொதிகை'யில் பேசும்போது கேட்டு அத்தலைவரை எண்ணி வியந்திருக்கிறேன். உங்கள் பதிவில் மேலும் ஏதும் தகவல் உள்ளதா என மேய்நது விட்டு பின்னர் வருகிறேன்.

said...

இளம்தலைமுறைக்கு தெரியவேண்டிய செய்தி.

said...

இந்த பெருந்தன்மையெல்லாம் காமராஜருக்கு மட்டும்தான் அய்யா வரும்.இன்று இன்னொருவருக்கு பாராட்டுவிழா என்றாலும் தலைவரைத்தான் புகழ வேண்டிய கட்டாயம். முகதுதி வேண்டாம் எனும் தலைவர் எவர் உள்ளார் இன்று?