Friday, June 27, 2008

மடமையை மாற்றிய காந்தியடிகள்

மனிதர்களைத் தெய்வம் என்று கருதி மாளும்
மடமையினை வேரறுத்தார் காந்தி அண்ணல்
புனிதர் அவர் உண்ணாமல் நோன்பு கொண்டு
போராட்டக் களம் தன்னில் உள்ள நேரம்
தனியாக அவர் தம்மைக் காண வென்று
தம்பதியர் கிராமம் விட்டு வந்திருந்தார்
கனிவான காந்தி யண்ணல் கால்கள் தம்மைக்
கழுவி அந்த நீர் கொண்டு தங்கள் பிள்ளை


உடல் நலமற்றிருப்பானுக்கு உள்ளே தந்தால்
உயிர் பிழைப்பான் என்றே தான் வேண்டி நின்றார்
மடமையிதை காந்தி யண்ணல் அவர்களிடம்
மாற்றி விட பல மணிகள் எடுத்துக் கொண்டார்
கடவுளினை நம்புங்கள் நோயைத் தீர்க்க
கட்டாயம் மருத்துவரைச் சென்று பாருங்கள்
மடமையிது மனிதர்கள் தம் கால் கழுவி
மருந்தென்று உண்பதென்று உணர்த்தி வென்றார்

1 மறுமொழிகள்:

said...

மூட நம்பிக்கைகள் மாற்றி, புதியதோர் உலகம் சமைப்போம்.

www.aaththigam.blogspot.com

நேரமிருந்தால் பாருங்கள் ஐயா!
:)))