பாரதத்தின் பிரதமராய் அன்னை இந்திரா
பாங்காக வீற்றிருந்த அந்த நேரம்
சீர் நிறைந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில்
செய்திகளைத் தந்திருந்தார் அந்த வேளை
ஆர்வமுடன் கேட்டு நின்றார் ஒருவர் அன்னை
அவர் முதல் பெண்மணியா நாட்டில் என்று
வாய் திறந்தார் அன்னை நான் ஒர் வேலைக்காரி
வழங்குகின்றார் சம்பளம் என் நாட்டு மக்கள்
Monday, June 30, 2008
நான் ஒர் வேலைக்காரி
Subscribe to:
Post Comments (Atom)
4 மறுமொழிகள்:
அன்புள்ள அய்யா
அருமையான கவிதை - அன்னை இந்திராவின் குண நலன் போற்றும் கவிதை. மகிழ்ச்சியாக இருக்கிறது.
நேரமிருப்பின் அன்னையைப் பற்றிய என்னுடைய கவிதையினையும் படித்து கருத்துக்கூற வேண்டுகிறேன்.
நன்றி
செல்வி ஷங்கர்
உங்களை நிறைய பொது கூட்டங்களில் பார்த்திருக்கேறேன்... பேச ஆசை .. ஆனால் .... இப்போ சவூதியில் விஜய் TV யில் ரசிக்கிறேன்... இப்போ நெட்டிலும் .... வாழ்க வளமுடன்..
அரசு ஊழியன் கூட, நான் ஒரு மக்கள் ஊழியன் என்று சொல்லாத இக்காலத்தில் "நான் ஒரு வேலைக்காரி" என்று சொன்ன அன்னையை எண்ணி வியக்கிறேன்.
அன்புடன்,
உழவன்
//நான் ஒர் வேலைக்காரி
வழங்குகின்றார் சம்பளம் என் நாட்டு மக்கள்//
இது போல் வேலைக்காரியை நாம் விட்டு வைக்க மாட்டொம் அதான் சுட்டுக்கொன்றறோம.... நாம் உழைப்பைச்சுரண்டி வரிப்பணத்தில் நகரத்துக்கொர் வீடு கட்டி அல்லக்கைகள் ஆயிரம் கூட வைத்து... சொகுசு காரில் பவனி வரும் அட்டைப்பூச்சிகளுக்குத்தான் நாம் சலாம் அடிப்போம்...
ஆயிரம் அக்னிக்குஞ்சிகள் காத்திருக்கின்றது வெந்து தனிய போகுது காடு... எங்கள் உழைக்கும் அப்பாவி மக்கள் இரத்தங்களை சுவைபார்க்கும் அட்டைப்பூச்சிகளை அழிப்பதற்க்கு
Post a Comment