Saturday, June 28, 2008

அவரைக் கூட

முன் பின்னாய்க் கார்கள் சூழப் போனதுண்டா
முறை கெட்டார் அவர கிட்டே சென்றதுண்டா
தன் பெண்டு பிள்ளை என்று அவருக்காகத்
தனியாக உறவுண்டா தாயையன்றி
என் செய்தார் அம்மனிதர் ஏழைகளை
எப்போதும் உறவாகக் கொண்டிருந்தார்
புன் செயலைச் செய்தார்கள் அவரைக் கூட
போட்டியிலே தோற்கடித்து மகிழ்ந்து நின்றார்

1 மறுமொழிகள்:

said...

போட்டியிலே தோற்கடித்தார் மகிழ்ந்தா நின்றார்!
தோல்வியிலும் சாதனை