இங்கிலாந்து சென்றிருந்த காந்தியாரை
எல்லோரும் சந்திக்க விரும்புகின்றார்
அங்கவரில் நகைச்சுவையின் அரசரென்னும
அறிஞர் சார்லி சாப்ளினும் ஒருவராவார்
இங்கிதனை அடிகளிடம் நண்பர் சொன்னார்
யார் அந்தச் சாப்ளின் என்றடிகள் கேட்டார்
தம் கடமை தனை மட்டும் உணர்ந்து நின்றார்
தானறியார் திரைப் படத்துப் பெரியார் தன்னை
இங்கிதைப் போல் ஒரு செய்தி தமிழகத்தில்
என்.எஸ்.கே.என்னும் நந்தம் கலைவாணர்தாம்
தம் குடும்ப விழாவிற்காய் சிவாஜியுடன்
தமிழ்க் கண்ணதாசனையும் அழைத்திருந்தார்
பொங்கு தமிழ்க் கவிமணியாம் காந்தி அன்பர்
பொறுமைமிகு தேசிக வினாயகத்தை
இங்கிவரும் காணுதற்கு விழைந்ததாலே
இருவரையும் அவரிடத்தில் அழைத்துச் சென்றார
கவிஞர் இவர் கண்ணதாசன் என்று சொல்ல
கவிமணியார் உளம் கொண்டு வாழ்த்தி நின்றார்
இனிய தம்பி சிவா ஜி கணேசன் இவர்
என்று சொல்ல கவிமணியார் மெல்லக் கேட்டார்
சரி இவர்கள் செய்யும் தொழில் என்ன என்றார்
சட்டென்று கலைவாணர் சிரித்துச் சொன்னார்
திரைப் படமே பார்த்ததில்லை பாட்டையாவும்
தெரியவில்லை சிவாஜியை விளக்கம் சொன்னார்
Monday, June 9, 2008
காந்தியடிகளும் சீடரும்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment