வேண்டாத புகழுரைகள் தம்மை என்றும்
விரும்பியதே இல்லை அய்யா காமராஜர்
தாண்டிஅங்கே ஒரிருவர் பேசி விட்டால்
தண்டனைதான் வேறென்ன தொலைந்தார் அவர்
மண்டலத்து மாநாடு ஒன்றில் ஒரு
மாபெரிய தமிழறிஞர் பேச வந்தார்
கண்ட ஒரு காட்சியினைச் சொல்லி நிற்பேன்
காமராஜர் காமராஜர் காமராஜர்தான்
பெருந்தலைவர் எழுந்து நின்றால் அவர் தலையோ
பேரிமயம் தனில் இடிக்கும் இரண்டு கால்கள்
பொருந்தி நிற்கும் குமரி அன்னை கடற்கரையில்
பொரு தடக்கை பாரதத்தை அணைத்து நிற்கும்
விறு விறுப்பாய்ப் பேசி நின்றார் பெரியவரோ
விலா நோகச் சிரித்து என்னை அரக்கன் என்று
சுறு சுறுப்பாய்ப் பேசுதியோ நிறுத்து போதும்
சொக்கிப் போக முட்டாளா நான் என்றாரே
Saturday, June 28, 2008
சொக்கிப் போக முட்டாளா
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
சொக்கிப்போகாத அந்த மந்திரத்தை இன்றிருப்போருக்கும் சொல்லிட்டுப் போகக்கூடாது!!!
நெல்லைக் கண்ணன் அய்யா,
நம் துரதிர்ஷ்டம் பெருந்தலைவர் போன்றவர்கள் 40 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதது.காமராசர் வளர்த்த காங்கிரஸ் இப்படி மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடித்து வயிறு வளர்க்கும் ஆசாமிகளால் சீரழிக்கப் பட்டுவிட்டது.
Post a Comment