அழகுக்கே அழகாகும் அழகுப் பெண்ணாள்
அவள் போல அழகில்லை ஊரில் எங்கும்
உளம் கொண்டோர் மண வாழ்வில் பெண்ணவளை
உரிமை கொண்டு வாழ வைப்பார் யாருமில்லை
கிழமாகி அவ் வழகு அழிந்த தாங்கு
கேட்பதற்கு நாதியின்றி ஒழிந்ததது
வளம் கொண்டோர் தம் பொருளை மறைத்து வைத்து
வழங்காமல் அது அழிந்து ஒழிந்தாற் போல
திருக்குறள்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள் மூத் தற்று
Wednesday, June 18, 2008
குறட் கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
இந்த உவமை எப்படிப் பொருந்துகிறது எனச் சற்று விளக்குவீர்களா ஐயா?
எல்லாம் அற்றுப் போன வறியவர்க்கு
ஒரு உதவியும் செய்யாதவனுடைய
செல்வம் மிக மிக அழகுடைய
பெண்ணொருத்தி உறவென்றும் நட்பென்றும் யாரும் இல்லாதவளாய்
திருமணமே இல்லாமல் இளமை அழிந்
தொழிந்து முதியவளானதைப் போன்றது.
அச்செல்வம் எந்தப் பயனும் அற்றதாய்
ஆகும். வாழ்க தமிழுடன்.
அன்பன் நெல்லைக்கண்ணன்
Post a Comment