Wednesday, June 18, 2008

காந்தியடிகள் வாழ்வில்

               இங்கிலாந்து மன்னரையே சந்திக்கத்தான்

                   இந்தியத் தாய் தலை மகனாம்  காந்தி சென்றார்

               அங்குள்ளோர்  மன்னரையே சந்திக்கவே

                   ஆடையுள்ள   ததை  அணிய வேண்டும் என்றார்

               பங்கமில்லா ஆடை   எந்தன் பருத்தி ஆடை

                   பாரதத்தின்  ஆடை அதே  போதும் என்றார்

               இங்கிலாந்து மன்னர் அதை ஏற்றுக் கொண்டார்

                    எளிமையினால்  காந்தி அங்கே வெற்றி கண்டார்

      2/     மன்னரையே சந்தித்து  வெளியில்  வந்தார்

                     மகாத்மாவாம் காந்தியண்ணல் செய்தியாளர்

               என்ன இந்த ஆடை  இதை  ஏன் அணீந்தீர்

                      இவ்வளவு குறைவாக அய்யோ என்றார்

               கன்னல் மொழிக் காந்தி சொன்னார் எனக்கும் சேர்த்து

                       கனமான ஆடைகளை  உங்கள்  மன்னர்

               தன்னுடம்பில் அணிந்துள்ளார்  அதுவே போதும்

                       தரம் இதுவே எமக்கு இது போதும் என்றார்                  

3 மறுமொழிகள்:

said...

இவனாடை அணிந்திடவே ஆங்கில மன்னன் அனுமதித்தான்

அவன் பெருமையை அது காட்டுது

வெளிவந்து காந்தி சொன்ன இங்கிதமில்லா வார்த்தைகள்

இவர் பெருமையை இது காட்டுது

அது அவராடை இது என்னாடை எனச் சொல்லியிருக்கலாம்

ஆனைக்கும் அடி சறுக்கும்!

said...

நெல்லை கண்ணன் அய்யா,
அற்புதமான பாடல்.காந்தியத்தை மறந்து,திராவிடீயம் என்ற நஞ்சை உட் கொண்டேதே தமிழகம். என்ன கொடுமை.

பாலா

said...

எங்களது செல்வமதைக் கொள்ளை
கொண்டு
எழில் மன்னர் அணிந்துள்ளார்
ஆடைகளை
எங்களது நிலை உணர்த்த இந்த ஆடை

என்பதுதான் காந்தி தந்த பதிலின்
அர்த்தம்
வாழ்க தமிழுடன்
அன்பன்
நெல்லைக்கண்ணன்