Sunday, June 29, 2008

இரங்கி நின்றார்

அறியாதான் ஒருவன் வந்து மிகச் சிறந்த
அறிஞர் அவர் முன்னாலே நின்று கொண்டான்
புரியாமல் பல கேள்வி அடுக்கி நின்றான்
புரிந்தவரோ புரியாராய் நின்றிருந்தார்
தெரியாமல் திகைக்கின்றார் அய்யோ அய்யோ
தினம் கேட்டும் பதில் இல்லை வென்றேன் என்று
அறியாதான் ஆடுகின்றான் அய்யோ பாவம்
அறிஞர் அங்கு அவனுக்காய் இரங்கி நின்றார்

2 மறுமொழிகள்:

said...

நெல்லை கண்னன் அய்யா,

நீங்கள் அறியாதான் என்று யாரை கூறுகிறீர்கள்?அகம்பாவம் பிடித்த மானமிகு கருப்பு சட்டை அய்யாவையா?

பாலா

said...

அறியாதான் அவன்செயலை தளராமல் செய்கின்றான்

அறிந்தவரோ அவன்செயலை ஆங்கெண்ணி இரங்குகிறார்

யாரிவரோ என்றிங்கு தேடுபவர் திகைக்கின்றார்

இரங்குபவரைத் திகைப்பதுதான் நகைப்பாக இருக்கிறது!