1. எந்த வித உழைப்புமின்றி எத்தர்களோ
எத்தனையோ கோடிகளில் புரளுகின்றார்
நொந்தழுது நிற்கின்றார் ஏழையரோ
நூறாண்டு உழைத்தாலும் உணவேயின்றி
கொந்தளித்து எழுகின்றார் கொடுமைகண்டு
கோபமுற்ற ஏழை வீட்டு இளைஞரெல்லாம்
இந்த நிலை முடியாமல் தொடர்வதனால்
எடுக்கின்றார் ஆயுதத்தை வழியே யின்றி
2.. நொந்தவர்தம் துயர் தீர்க்க வந்தவரோ
நூறாக ஆயிரமாய்க் கோடிகளை
மைந்தருக்கும் சந்ததிக்கும் சேர்த்து வைத்து
மகிழ்வாக வாழுகின்றார் என்ற போது
வெந்தணலில் வாழுகின்ற ஏழையர்கள்
விடிவிற்காய் ஆயுதங்கள் தூக்குகின்றார்
வந்தவினை இது வளரக் காரணமாய்
வாழ்வார்கள் இன்னும்தான் வாழ்கின்றாரே
0 மறுமொழிகள்:
Post a Comment