கல்வி கற்கக் குழந்தைகளை அனுப்புகின்றார்
கண்ணீராய்க் கரைகின்றேன் அவர் குறித்து
நல் விதமாய்க் கற்க வைக்கும் ஆசையிலே தான்
நாடெங்கும் அனுப்புகின்றார் தவறேயில்லை
புல்லி அநதத் தாய் மடியில் சீலைக்குள்ளே
பொதிந்தன்பு கண்டவராய் வளரும் பிள்ளை
கிள்ளி அதை எறிகின்றார் கல்விக்கென்று
கிறுக்காகும் அப்பிள்ளை மேதையாமோ
படி படி என்றே அவரைப் படுத்துகின்றார்
பாசமதே இல்லாமல் துரத்துகின்றார்
துடி துடி என்றே பிள்ளை துடிக்கின்றது
தூங்கும் வரைப் படிப்பிற்காய் நடிக்கின்றது
அடி அடியென்றே சில பேர் அடித்தொழிப்பார்
அவர்க்கு வந்து பிறந்த பிள்ளை மனம் ஒடிப்பார்
வடி வடி நீயும் இங்கே கண்ணீர் வடி
வருங்காலச் சந்ததிக்காய் இவரைக் கடி
Thursday, June 12, 2008
இவரைக்கடி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment