நீரால் நிறைந்திருக்கும் மாந்தை மாநகரத்தில
நிழல் போலே இருக்கின்ற அன்பால் நிறைந்திட்ட
ஊரார் இவரன்றி நம் குறையைத் தீர்த்து விட
உறவென்று யார் உண்டு உணர்ந்தாயோ தோழி நீ
யாராலே இந்நோய் எமக்கு விளைந்ததுவோ
யார் குதிரை வேகத்திற் கிலக்கணமாய் ஒடுவதோ
சீராக அவரன்றி யார்தான் நம் குறை தீர்ப்பார்
சேரனன்றோ இந்நோய்க்கு ம்ருந்தாவான் என் தோழி
ஊரார் தனை அழைத்து உண்மை நிலை சொல்லிடுவோம்
பேராளன் சேரனிடம் பேசி அவன் தோள் சேர
நீரேதான் பொறுப்பு என்றும் நீதி சொல்லி மன்னனையே
வாராதிருந்தால் எங்கள் வடிவழகுப் பெண் அழிவாள
கார் போலக் கருணை கொண்டு காத்திடுக என வேண்ட
ஊராருக்கே முடியும் உயர்ந்தவரே காத்திடுவார
வார் குழலாள் காதலினை வாழ வைக்கும் பொறுப்பதனை
ஊராருக்களிக்கின்ற உயர்ந்த கவி காண்பீரே
முத்தொள்ளாயிரம்
மல்லல் தீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்
சொல்லவே வேண்டும் நம் குறை - நல்ல
திலகம் கிடந்த திரு நுதலாய் அஃதன்றோ
உலகம் கிடந்த இயல்பு
Wednesday, June 11, 2008
பழம்பாடல் புதுக்கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
தட்டச்சுப்பிழைகளைச் சற்ரு தவிர்த்தால் கவியின்பம் சிறக்கும்
இயன்ற வரை தவிர்த்துள்ளேன் ஒன்
றிரண்டு இல்லாமல் கவனிப்பேன்
இனிமேல் அய்யா.
வாழ்க தமிழுடன்.நன்றி அய்யா.
தங்கள் நெல்லைக்கண்ணன்
Post a Comment