உந்தனது கீழிருக்கும் ஏழையர்கள்
உறவினர்கள் நண்பரொடு அன்பு கொண்டோர்
வந்தமைந்த மனைவி அவள் வழியாய் வந்த
வாரிசுகள் என்றிவர்கள் இடத்திலெல்லாம்
நொந்தழிக்கும் கோபமதைக் கொள்ளல் தீது
நொய்ந்தவர் மேல் கோபமது தீதோ தீது
வந்த சினம் தானாக மறைந்து விடும்
வாழும் வழி சொல்லுகின்றார் வள்ளுவரும்
2. இந்த விதம் சொல்லி விட்டு வள்ளுவரும்
இடக்காகச் சொல்லுகின்றார் அதனைப் பார்ப்போம்
மைந்தர்களே உம்மை விடப் பெரியோர் ஆளும்
மாட்சிமையின் அதிகாரப் பொறுப்பில் உள்ளோர்
எந்த விதத் தவறுகட்கும் அஞ்சா நெஞ்சர்
இவரிடத்தில் சினம் கொள்ளும் தடுக்க மாட்டேன்
சந்தடியில் அடி வாங்கித்தான் திருந்த
சரியான வழி சொன்னார் வள்ளுவரும்
திருக்குறள்
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல் இடத்துக்
காக்கிலென் காவாக்கால் என்
0 மறுமொழிகள்:
Post a Comment