வளை கொண்ட கையொடு மூங்கில போல் தோளுமே
வடிவாகக் கொண்ட என் தோழி
பகை வெல்லும் வாட்களைக் கண்களாய்க் கொண்டும் நற்
பனிப் பார்வை கொண்டு நீ வாழி
இளையவள் என் கண்ணில் பாண்டியன் படுதலை
என் அன்னை தடுப்பதைப் பார் நீ
பகைவரைப் போலவே அன்னையும் என்னிடம
பழி காணல் என்னடி நீதி
கதவினை அடைத்தெனை உள்ளேயே வைத்தலில்
கடுமைகள் காட்டலைப் பார் நீ
பதமான வார்த்தைகள் ஒன்றுமே இல்லை நான்
படுகின்ற பாட்டினைக் கேள் நீ
இதமின்றிக் கொல்கின்ற இவளது வாழ்க்கையில்
இளமையே இருந்தது இல்லையோ
பதமான காதலும் இவளது வாழ்க்கையைப்
படுத்தியதால் இந்தத் தொல்லையோ
ஒரு வேளைப் பிறக்கையில் முதியவளாகவே
உதித்தனளோ எந்தன் அன்னையே
கருவுற்று எனைப் பெற்றாள் என்கையில் புரிகிறேன்
கன்னியாய் இருந்துளாள் உண்மையே
திருவுற்ற வேலதால் பகைவர்கள் தம்மையே
தெருவுறச் செய்த நம் பாண்டியன்
மருவற்ற கோலத்தைப் பார்ப்பதில் இவட்கென்ன
மறந்தனள் இளமையில் வாழ்ந்ததை
முத்தொள்ளாயிரம்
வளையவாய் நீண்ட தோள் வாட்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ - தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல் வேல் மாறனைக்
கண் கொண்டு நோக்கல் என்பாள்
Thursday, June 12, 2008
பழம் பாடல் புதுக்கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
தூங்கும் வரைப் படிப்பிற்காய் நடிக்கின்றது
அருமையான வரிகள்...!
Post a Comment