பொய் கூறி வாழ்ந்திடலாம் என்று எண்ணும்
பொறுப்பற்றோர் தனைப் பார்த்து வள்ளுவரும்
சொல்கின்றார் ஒரு செய்தி ஆகா ஆகா
சோர உணர்வுள்ளோர்கள் உணர்வதற்காய்
எல்லார்க்கும் தெரியாதே பொய்கள் சொல்லி
ஏய்த்ததுவாய் நினைக்கின்றீர் அய்யோ பாவம்
உள்ளம் உம் உள்ளம் அப்பொய்யைக் கொண்டு
உமைச் சுட்டு உமைச்சுட்டுக் கொன்றே போடும்
திருக்குறள்
தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
0 மறுமொழிகள்:
Post a Comment