வடக்கிருந்து வருகின்ற வாடைக் காற்று
வாயாரப் புகழுதிங்கே பாண்டியனை
மடக்கி அவன் வடக்கையையும் தன்னுடைய
மாநிலத்தில் சேர்த்தனால் விளைந்த நன்மை
தொடக்க முதல் புகழுதது பாண்டியனை
தூய அவன் செங்கோலை ஆட்சியினை
அடக்கமுள்ள பெண்ணாளும் அரற்றுகின்றாள்
ஆம் அங்கு பாண்டியனால் அவதி யுற்றாள்
வடக்கிருந்து வருவதனால் புகழ்ந்து நின்றாய் என்
வளையல்களை நான் இழந்த தவனால்தானே
உனக்கென்ன தெரியும் தெற்கே பொதிகை மலை
உள்ளோர்கள் சமையலுக்கே ச்ந்தனமாம்
மணக்கின்ற மரம் கொண்டே சமைத்திடுவார்
மாற்ன் அவன் பெருமை இது சரிதான் ஆனால்
எனக்கிங்கு விளைந்தற்கு என்ன நீதி
என்ன செய்வாய் தென்றலுக்கே தெரியும் அது
முத்தொள்ளாயிரம்
மாறடு போர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் - சோறடுவார்
ஆரத்தால் தீ மூட்டும் அம்பொதியில் கோமாற்கு என்
வாரத்தால் தோற்றேன் வளை
Tuesday, June 10, 2008
பழம் பாடல் புதுக் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment