Friday, August 1, 2008

குறட் கருத்து பொருட்பால்

பணிந்து இனிய சொல்லி நிற்பார்
  பண்பு நிறைஅன்பு செய்வார்
  கனிந்த மொழி தன்னாலே
  கடவுளையும் நண்பு கொள்வார்
  விரிந்த மனம் கொண்டுயர்ந்தார்
  வேண்டு மட்டும் உதவி நிற்பார்
  நிறைந்துணர்ந்த பெரியோர்கள்
  நிலையுணர்ந்து பணிந்து நிற்பார்

  நிமிர்ந்தெங்கும் திமிர் செய்வார்
  நிலையின்றி உளறி நிற்பார்
  திமிர்ந்தெங்கும் தனைப் பெரிதாய்த்
  தெய்வமென்றே கூறி நிற்பார்
  குமையாமல் தனை உயரவாய்க்
  கூறி நிற்றல் சிறியர் செயல்
  இமையவரே தாம் என்று
  இயம்பி நிற்பார் சிறுமையினால்

  திருக்குறள்
  பணியுமாம் பெருமை என்றும் சிறுமை
  அணியுமாம் தன்னைவியந்து

1 மறுமொழிகள்:

said...

பண்பின் மாண்பு தெரியுது
பரணி பாயும் நெல்லையாரின்

பாட்டினிலே ,தமிழின் இனிமை
பாராட்டி ,மகிழுவோம் நாமும்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/