கொடுப்பதிலே சுகம் கண்டு விட்டவர்கள்
கொடுப்பார்கள் கொடுப்பார்கள் போதையேறி
அடுத்தவர்க்கு இன்பம் வர அளிப்பதிலே
அவர் கொள்ளும் இன்பமதோ கோடி கோடி
தடுப்பதற்கு முயல்கின்ற உறவைக் கூட
தள்ளி வைத்தே கொடுப்பார்கள் அவர்க்கும் கூட
சிறப்பிதனைக் கைக் கொண்டார் மட்டும் இங்கே
செத்தொழிவதில்லை என்றும் வாழ்ந்தே வென்றார்
அடுப்பதனைப் பற்ற வைத்து விட்டுச் சென்று அங்கே
அய்யா என்றழைத்தாலே போதும் உடன்
பருப்பு வரும் அரிசி வரும் பல சரக்குப்
படையெடுத்து ஒடி வரும் அதன் விளைவாய்
தொடுத்து வரும் உதவியினால் அக் குடும்பம்
தொல்லையில்லா வாழ்க்கையதைத் துய்த்திடுமே
கொடுத்ததனால் வாழ்கின்றார் இன்றும் கூட
கொற்றவராய் எம்.ஜி.ஆர்.என்னும் மன்னர்
Monday, August 4, 2008
எம்.ஜி.ஆர்.
Subscribe to:
Post Comments (Atom)
5 மறுமொழிகள்:
NANDRI AIYA.
Vanakkam.
Just today I got to know about your posts.
Reading & Relishing them.
God Bless.
Anbudan,
Srinivasan.
Perth, Australia.
Thank you.
//அடுப்பதனைப் பற்ற வைத்து விட்டுச் சென்று அங்கே
அய்யா என்றழைத்தாலே போதும் உடன்
பருப்பு வரும் அரிசி வரும் பல சரக்குப்
படையெடுத்து ஒடி வரும்//
ஆற்றுப் படைபோல் அருமையாய் சொன்னீர்கள்
ஊற்றுப் பெருக்கை உவந்து.
அழகு அய்யா!
அவர்பற்றி இவ்வளவு அருமையாக உங்களால் மட்டுமே எழுத முடியும்...!
அவரினால் வாழ்வு பெற்றோர் என்னைப்போல் பல ஆயிரம் பேர் .
அன்னாரை நினைவுகூர்ந்ததற்கு நன்றி
முன்னாள் முதலமைச்சரை
வாழ்த்தினது உன் கவிதை
மிக்க நன்றி.
நேற்று தான் ஐயா காமராஜர்
நினைவுகளை நீ பேச
இணையத்திலதை நான் கேட்டேன்
அருமை அருமை அருமை!
புன்னகையோடு நீ பேசுவதைக் கண்டு
தமிழன்னையே மகிழ்கிறாள்
தாயவள் உன்னால் பெருமை அடைகிறாள்
நீ வாழ்க
தமிழ் வாழ!!
அன்புடன்
என் சுரேஷ்
Post a Comment