Saturday, August 2, 2008

பழம் பாடல்

வறுமையிலே பட்ட துன்பம் தாங்கொணாராய்
  வள்ளல் காளத்தி அவர் தம் இல்லம் நோக்கி
  பெரும்புலவர் நடக்கின்றார் வழித் துணையாய்
  பேச்சுக்குத் துணையாக வறுமை தன்னை
  இடம் கொடுத்து அன்பு செய்தார் வறுமையோடு
  ஏகடியம் பேசுகின்றார் இத்தனை நாள்
  நிழல் போல எனை நீயும் தொடர்ந்து வந்தாய்
  நிம்மதியே இல்லாமல் என்னைக் கொன்றாய்


  புடம் போட்ட தங்கம் எங்கள் காளத்தியார்
  பொன் வேலி வீட்டிற்குள் நான் நுழைந்தால்
  இடம் இல்லை உந்தனுக்கு அங்கே ஆக
  இன்று மட்டும் எந்தனுடன் இருந்து கொள் நீ
  திடமாவேன் என் தேகம் தேக்கும் ஆகும்
  திரிந்தலைந்த உன் நிலை தான் மாறிப் போகும்
  உடம்போடே நிழலாகி உழன்ற நீயும்
  ஒரு நாள்தான் நாளை வரை இருந்து கொள் நீ

  செய்யுள்

  நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல் போல
  நாளைக் கிருப்பையோ நல்குரவே -காளத்தி
  நின்றைக்கே சென்றக்கால் நீ யெங்கே நானெங்கே
  இன்றைக்கே சற்றே இரு

1 மறுமொழிகள்:

said...

வறுமை புலவன் உடலைதான் இளைக்கச் செய்திருக்கிறது.. அவனது உணர்வை வற்றச் செய்யும் சக்தி அதற்கு இல்லை என்பதை அழகாக வெளிப்படுத்தும் பாடல்.

பகிர்வுக்கு நன்றி அய்யா.