போர்க்களத்தில் பகைக் குலத்தார் கண்டாலே அஞ்ச வைக்கும்
பொரு தடக்கை தடந்தோள்கள் பொலி மார்பு கொண்டு நின்று
ஆர்க்கின்ற பெரு வீரன் அணையில்லா வெற்றி கொண்டான்
நீர்த்துப் போய் நிற்கின்றான் நெஞ்சிழந்து வேர்க்கின்றான்
பார்த்தானாம் பாவையவள் பால் பிறையின் நெற்றியினை
படீரென்று உடைந்ததுவாம் பாவியவன் பீடெல்லாம்
வார்க்கின்றார் வள்ளுவராம் வாழ வைக்கும் பேராசான்
வகையாகக் காமத்துப் பாலதனில் சுவையாக
குறள்
ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
Saturday, August 23, 2008
குறட் கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
அய்யா நெல்லை கண்ணன் அவர்கட்கு,
குறள் விளக்கங்கள் கவிதையாய் படிப்பதில் இனிமையாய் இருக்கிறது.
ஒரு சிறு விண்ணப்பம்,
குறளின் வரிசை எண்ணையும் அதிகாரத்தையும் பதிவிட்டால், அது தொடர்ப்பான மற்ற குறள்களை நாங்கள் தேடிப் படிக்க வசதியாய் இருக்கும்,
என்றும் நட்புடன்,
நிலவன்
Post a Comment