Tuesday, August 19, 2008

வாழ்ந்திருப்பார்

  பணமொன்றே வாழ்க்கையெனப் பாடுகின்றார்
  பகட்டான ஆட்டமதே நாடுகின்றார்
  குணம் கொண்ட ஏழையரைக் கண்ட போதோ
  கும்மாளம் போடுகின்றார் நாணமின்றி
  தனை உணர மாட்டாராய் தலை நிமிர்த்தி
  தான் என்ற ஆணவங்கள் காட்டுகின்றார்
  பணம் இழந்து நின்றிட்டால் மனைவி கூட
  பகையாகிப் போவாள் என்றுணர மாட்டார்

  குணம் நிறைந்து வாழ்ந்தார் தாம் இன்றும் இங்கே
  குலமாகி அனைவருக்கும் குருவேயானார்
  மணம் என்றால் அவர் வாழ்வே வாழ்வு என்று
  மதிக்கின்றார் உலகத்தார் வணங்கி நின்றார்
  நிணம் தசை நார் கொண்ட இந்த உடலுக்குள்ளே
  நிற்கின்ற உயிர் அதுவும் போன பின்னர்
  பணம் படைத்தார் காணாமல் போய் விடுவார்
  பலர் போற்றக் குணம் கொண்டார் வாழ்ந்திருப்பார்

1 மறுமொழிகள்:

said...

மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி இருந்தால் இறப்பிற்கு பின்பும் அவனது நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் ஐயா!