மதங்கள் என்று சொல்லி நிற்பார் தமக்கு ஒரு
மாபெரிய கேள்வியினை வைத்தார் நல்ல
விதம் எதையும் உணர்ந்துணர்ந்து உண்மை சொல்லும்
விவேகானந்தத் துறவிகேட்பீர் அய்யா
விதவைகளின் கண்ணீரைத் துடைக்க வொண்ணா
வெறும் வயிற்று ஏழைக்ளுக்கு உணவளிக்கா
மதங்களினை மதங்கள் என்று கொள்ள மாட்டேன
மனிதர்களே உணர்ந்திடுங்கள் என்று சொன்னார்
மனிதர்களுக்குதவத்தான் மதங்கள் வெறும்
மடமைகளும் சடங்குகளும் அல்ல என்று
கனி மொழியில் சொல்லாமல் கொஞ்சம் கொஞ்சம்
கடின மொழி தனிலேதான் சொல்லிச் சென்றார்
தனி மனிதரல்ல பெரும் இயக்கமாகி
தாம் நின்றார் நமக்கெல்லாம் தாயாய் நின்றார்
இனி உணர்வோம் மனிதர்களே மனிதம் பேணல்
எம்மதமும் கொண்டுள்ள சுருதி நாதம்
Sunday, June 8, 2008
அன்றே சொன்னார்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment