உடம்பு எனும் சட்டைக்குள் உயிர் கிடந்து
ஒராயிரம் துன்பம் அடைகின்றது
விடுதலைக்காய் ஏங்குகின்ற உயிரை நானும்
விட்டு விட விழைகின்றேன் அதனால் இனி
உணவருந்தல் நிறுத்திடுவேன் தண்ணீர் கூட
உட் செல்ல அனுமதியேன் என்று சொல்லி
நிணம் தசை நார் கொண்டதம்மின் உடலை விட்டு
நிம்மதியாய் உயிர் பிரியச் செய்த வீரர்
கணப் பொழுதும் ஏழைகளை மறந்து விடாக்
காந்தியத் தொண்டர் இவர் அடிகள் தம்மின்
உளத்தினிலே குருவாக உயர்ந்து நின்ற
உயர் குணத்துத் துறவி இவர் வள்ளுவரின்
குறட் கருத்துக்குயிராகித் துறந்த வீரர்
கொள்கை வழி சிறந்து நின்ற காந்தி சீடர்
அற வழியார் வினோபா அவரே இங்கு
ஆண்மையுடன் உயிர் துறந்த ஞான வீரர்
திருக்குறள்
மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல் உயிர் அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
Sunday, June 8, 2008
ஞான வீரர்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment