சேரனது பெருங்கோட்டைக் கதவைச் சென்று
சேர்ந்துவிட்டேன் அவன் காணும் ஆசையாலே
ஆரமென மாணிக்க மாலை அதை
அணிந்திருப்பான் தனைக் காணும் வேட்கையாலே
பேர்கிறது என் நெஞ்சு முன்னே சென்று
பொருமி மீண்டும் வருகிறது அலைகிறது
ஊரினிலே வறியவர்தம் நாணம் அவர்
உள்ளமதை வருத்தி நிற்கும் தன்மை போலே
வறுமையிலே வாடி நிற்பார் செல்வந்தர் தம்
வாசலுக்கு உதவி கேட்கப் போயிடுவார்
அறுபடும் தம் உள்ளத்து நாணம் தன்னால்
அங்கொன்றும் கேட்காமல் வெட்கி நிற்பார்
தறி படும் அப்பாட்டைத்தான் எந்தன் உள்ள்ம்
தன் பாடாய்க் கொண்டிங்கேத் தவிக்கிறது
அறிவீரோ வ்றியவரும் நானும் ஒன்றாய்
ஆன கதை இவ்வாறே பெண்ணாள் சொன்னாள
முத்தொள்ளாயிரம்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைந்தேன் - நாணிப்
பெருஞ் செல்வர் இல்லத்து ந்ல்கூர்ந்தார்ப் போல
வருஞ் செல்லும் பேரும் என் நெஞ்சு
Sunday, June 8, 2008
பழம் பாடல் புதுக்கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment