தாயாக வேண்டும் நான் உங்களாலே
தளிர்க் கொடியாள் வேண்டி நின்றாள் விவேகாநந்தத்
தூயாரை வங்கக தேசத் துறவி தன்னை
துடித்தெழுந்தார் அம்மா என் அம்மா என்றார்
சேயானேன் உங்களுக்கு இன்றே இங்கே
சிறப்பான தாய் பெற்றேன் பெற்றேன் என்றார்
காயான மனத்தாளோ கனிந்து நின்றாள்
கால்களிலே விழப்போனாள் தடுத்தார் ஞானி
தாயானீர் மகனானேன் என்ற பின்னர்
தாய் மகனின் கால் பற்றல் நீதியாமோ
போய் வாரும் என் தாயே உலகமெங்கும்
போற்றி நிற்பேன் உம்மை எந்தன் தாயே என்று
நீர் வாரும் கண்களுடன் அந்த அன்னை
நெக்குருகிச் செல்கின்றாள் தனை உணர்ந்து
பார் போற்ற இன்றும் அந்தத் துறவி வாழும்
பாங்கதனை உணர்ந்தோம் நாம் பணிந்தே வெல்வோம்
Sunday, June 8, 2008
பணிந்தே வெல்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
Anbulla Ayya, Vanakkam. Ungalathu valiapoo "thamizhkadal" alagu, arpautham. Ithu enathu muthal varugai.Meendum meendum enathu varugai thodarum.Santhippom Insha Allah.
S.A.Shahul Hameed,
6/44 North Ayyapuram Street,
Kadayanallur- 627751
92866 52800
Post a Comment