உங்கட்க்கொரு பொருள் உடைமை ஆயிற்றென்றால
உடன் அதனை பத்திரத்தில் பதிவு செய்வீர்
தென களத்தான் பாண்டியனின் உடைமை என்று
திசை சூழ்ந்த உலகத்தை அவனின் யானை
வன்களத்தில் வீழ்ந்து படும் எதிரி மன்னர்
வாகான மார்பகத்தில் தந்தம் கொண்டு
எங்களது பாண்டியனின் உடைமை இந்த
எழில் உலகம் என்றெழுதித் தீர்க்கின்றது
சங்கதியைக் கேட்டீரோ பாண்டியனின்
சரித்திரத்தில் சரி பங்கு கொண்ட யானை
தந்தமதை எழுத்தாணியாகக் கொண்டு
தார் வேந்தர் மார்புகளை ஒலையாக்கி
இங்கிவர்கள் அனைவருமே பாண்டியனின்
இலை வேலுக்கு இலக்காகி வீழ்ந்ததனால்
பொங்கு கடல் உலகெங்கள் சொந்தம் என்று
பொறுப்பாகப் பதிகிறதாம் பத்திரத்தை
முத்தொள்ளாயிரம்
மருப்பூசியாக மறங்கனல் வேல் மன்னர்
உருத்தகு மார்போலையாக-திருத்தக்க
வையகம் எல்லாம் எமதென் றெழுதுமே
மொய்யிலை வேல் மாறன் களிறு
Thursday, June 5, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment