பிறந்த நாள் கொண்டாட்டம் சோழனுக்கு
பெறுகின்றார் பரிசில்கள் வரிசையாக
சிறந்ததாம் பசுவினது கூட்டத்தோடு
செம்பொன்னும் அந்தணர்கள் பரிசாய்ப் பெற்றார்
கறந்த பால் வெண்மையெனக் கவிதை தரும்
கனித் தமிழின் புலவோரோ யானை பெற்றார்
சிறந்த இந்தப் பரிசுகளின் இடையில் இந்தச்
சிலந்தி மட்டும் தன் கூட்டை இழந்ததென்ன
வீடுகளை வீதிகளைச் சுத்தம் செய்தார்
வேந்தனவன் பிறந்த நாள் என்பதாலே
நாடெல்லாம் சுத்தம் செய்தார் என்ற போது
நடப்பது தான் இது அதனைப் புலவ்ர் கண்டார்
கூடிழந்து சிலந்தி மட்டும் பிறந்த நாளில்
கொண்டாட்டம் இல்லாமல் இருத்தல் கண்டார்
வாடி நின்ற சிலந்தி அதன் வாட்டம் கண்டு
வடித்திட்டார் ஒரு கவிதை அதனைக் காண்பீர்
முத்தொள்ளாயிரம்
அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறூர்ந்தார்-எந்தை
இலங்கிலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ
சிலம்பி தன் கூடிழந்தவாறு
Friday, June 6, 2008
பழம்பாடல் புதுக்கவிதை முத்தொளளாயிரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment